உடல் நலம் குன்றிய இளம்பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன செவலை கிராமத்தில் பரத பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மகள் உள்ளார். இதில் 38 வயதான உடல் வளர்ச்சி குன்றிய ரேவதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட முத்துக்கண்ணு என்ற முதியவர் ஒரு மாட்டை வெட்டிக் கொன்றுவிட்டு, தனது மனைவி பொன்னம்மாள் என்பவரை அடிப்பதற்கு துரத்தி உள்ளார். இதனையடுத்து பொன்னம்மாள் ரேவதியின் வீட்டின் வழியாக ஓடியதால் முத்துக்கண்ணு ரேவதியின் வீட்டிற்குள் சென்று அவரின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ரேவதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ரேவதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் முத்து கண்ணுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.