Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் தெரிவித்த தகவல்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவியிடம் விசாரித்த போது குண்டூர் அய்யனார் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான சிவா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |