இளம் பெண் ஒருவர் தனது தாயையும் மகளையும் ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் தலை விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்
பிரான்ஸில் இருக்கும் Bagneux RER ரயில் நிலையத்திற்கு 20 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது தாய் மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் சென்றுள்ளார். ரயிலுக்காக காத்திருந்த அவர் திடீரென்று தனது தாயையும் தனது இரண்டு வயது மகளையும் தண்டவாளத்தை நோக்கி தள்ளி விட்டுள்ளார்.
இதனை பார்த்த சக பயணிகள் உடனடியாக அவ்விருவரையும் காப்பாற்றினார். இதனிடையே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு பெண்ணின் செயலுக்கான காரணம் குறித்து தெரியவரும்.