வினோதமான ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் குளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்
அயர்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வினோதமான ஒவ்வாமை நோயால் அவதிப்பட்டு வருகிறார். ரேச்சல் என்ற இளம் பெண் Aquagenic Urticaria என்ற அதாவது தண்ணீர் அலர்ஜி நோயால் மிகவும் துயரப்பட்டு வருகின்றார். இந்தப் பிரச்சனையினால் உடலில் தண்ணீர் பட்டால் வலியுடன் சேர்ந்து அதிக அளவு எரிச்சல் ஏற்படுவதால் குளிப்பதற்கும் கை கழுவுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். வாரத்தில் இரண்டு தினங்கள் மட்டுமே குளிக்கும் ரேச்சல் மழையில் நனைந்தால் அவ்வளவுதான்.
அதோடு இவரால் ஒரு நேரத்திற்கு அரை கப் தண்ணீர் மட்டுமே குடிக்க முடியுமாம். எனவே அவ்வப்போது நோயாளிகளுக்கு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றுவது போல் தண்ணீரை குளுக்கோஸாக ஏற்றிக்கொள்கிறார். இவருக்கு வேர்த்தாலும் உடனடியாக உடல் சிவந்து வலியை ஏற்படுத்துகின்றது. உலக அளவில் 50 பேருக்கு மட்டுமே இந்த நோய் உள்ளது. இதே பிரச்சினையால் பாதிக்கப்பட்ட யூடியூப் பிரபலம் நியா என்ற பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தனது நிலை குறித்து விளக்கியுள்ளார்.