Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்தவர்கள்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் வேலு கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருக செல்வி என்ற மகள் உள்ளார். இவருக்கும் தேனி மாவட்டத்திலுள்ள சுருளிப்பட்டி பகுதியில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட செல்விக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து முருக செல்வி தனது வீட்டின் கழிவறையில் உள்ள கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |