Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னேன்… தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரம்பலூரில் நடந்த சோகம்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலை செய்யாமல் இருப்பதற்காக பிரியங்காவை அவரது தாயார் ராசாத்தி திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியங்கா தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |