Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. 6 மாதத்திலேயே நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் டிரைவரான ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அனிதா திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து அனிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன அனிதாவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் அனிதாவின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அனிதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அனிதாவின் உறவினர்கள் மத்தூர்-திருப்பத்தூர் சாலையில் திரண்டு அனிதாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |