பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போஸ் ரோடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்த நித்யாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த நித்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.