Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 மாத திருமண வாழ்க்கை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரே மாதத்தில் கணவனை பிரிந்த பெண் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல மேடு கிராமத்தில் மாலா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் திருமணமான ஒரே மாதத்தில் தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டிலிருந்த பூச்சி மருந்தை  குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மாலா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |