Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குடும்பம்… கணவரின் காதல் லீலைகள்… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாரில் இருக்கும் தனியார் விடுதியில் கல்பனா என்ற இளம்பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் கல்பனாவிற்கு முகநூல் மூலம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனையடுத்து திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரசன்ன வெங்கடேஷ் கல்பனாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினர் இருவரும் ஆவடியில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரசன்ன வெங்கடேசின் தந்தை ராமசாமி, தாயார் விஜயா  மற்றும் அவரது தங்கை புவனேஸ்வரி ஆகியோர் இணைந்து தங்கள் வீட்டிற்கு ஒரு நபரை அழைத்து வருவோம் என்றும், அவருடன் நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் கல்பனாவை மிரட்டியுள்ளனர். அவ்வாறு தாங்கள் கூறியதை செய்யவில்லை என்றால் வெங்கடேஷுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாசப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கல்பனாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததுடன், அவரிடம் இருந்த 3 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகையை பறித்துள்ளனர்.

இதனையடுத்து தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்த அவர்கள் முயற்சி செய்வதை அறிந்த கல்பனா அங்கிருந்து தப்பித்து பிரசன்ன வெங்கடேஷ் பணிபுரியும் தனியார் நிறுவனத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது தான் பிரசன்ன வெங்கடேஷிற்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், அதே நிறுவனத்தில் தான் அந்தப் பெண் பகுதி நேரமாக வேலை பார்ப்பதும் கல்பனாவிற்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பிரசன்ன வெங்கடேஷ் இது போல பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததையும், அவரது பெற்றோர் தற்போது மேலும் ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் முடித்து வைக்க முயற்சி செய்வதையும் அறிந்து கல்பனா அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் ஆவடி காவல்நிலையத்தில் நடந்த அனைத்தையும் கூறி வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கல்பனா புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |