Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமானதை மறைத்து இளம்பெண் காதல்… ஏமாற்றமடைந்த காதலன் எடுத்த விபரீத முடிவு…!

திருமணமானதை மறைத்து காதல் செய்து வந்த காதலியின் வீட்டிலேயே காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் 25 வயதுடைய அம்ரின் என்பவர். இவருக்கு அஜித் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இவர் யோயோ என்ற சமூக வலைத்தளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பூபதி என்பவருடன் பழகி வந்தார்.

திருமணமாகாத பூபதியிடம், அம்ரின் தான் கல்லூரி மாணவி என்றும், தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்றும் காதல் வார்த்தை கூறி ஆசையாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் அம்ரினை பார்க்க அவரது வீட்டிற்கு பூபதி சென்றுள்ளார். அவரது வீட்டிற்கு தெரியாமல் அவரை  திருமணம் செய்து கொள்வதற்காக தாலியும் வாங்கிச் சென்றுள்ளார்.

ஆனால் வீட்டிற்கு சென்ற அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அப்போது வீட்டில் அம்ரின் இல்லை. அவரது இரண்டு குழந்தைகள் தான் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த குழந்தைகளிடம் நீங்கள் யாரென்று பூபதி கேட்டுள்ளார். அப்போதுதான் பூபதிக்கு தெரிய வந்தது, அம்ரினுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்பது.

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த பூபதி அம்ரினின் வீட்டிலேயே மின்விசிறியில் புடவையை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் இச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |