செல்போன் திருடிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான மோகனப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் மோகன் பிரியாவின் மீது லேசாக இடித்து விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தனது கைப்பையை சோதனை செய்தபோது செல்போன் காணாமல் போனதை கண்டு மோகனப்பிரியா அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்பதும், மோகன பிரியாவிடம் இருந்து செல்போன் திருடியதும் தெரிய வந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் லட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். மேலும் அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.