அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் அவரை விட 28 வயது மூத்த நபரை திருமணம் செய்ததால் பலரின் வசனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் சாரா ஹெண்டர்சன். இவர் 55 வயதுடைய டேரன் என்ற நபருடன் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் யூடியூபர்கள். இவர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்து 90 நாட்கள் ஆன நிலையில், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்திருக்கிறார்கள்.
தற்போது இவர்களுக்கு திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. இருவரும் அதிக வயது வித்தியாசம் கொண்ட தம்பதி என்பதால், பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதாவது டேரன் கொடூர புத்தி உடையவர் என்றும் சாரா பணத்திற்காக அவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறிவருகிறார்கள்.
இதுபற்றி சாரா தெரிவித்துள்ளதாவது, டேரனை பணத்திற்காக நான் திருமணம் செய்யவில்லை. அன்பு காட்டக் கூடிய குணமும், நகைச்சுவை உணர்வும் தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். டேரன், “எனக்கு எல்லாமே சாரா தான். என்னைப்பற்றி இந்த சமூகம் கேவலமாக பேசினாலும், எங்களது காதல் உண்மையானது” என்று கூறியிருக்கிறார்.