Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் யோசிக்க கூடாதா… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் உமாபதி என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தனிக்குடித்தனம் போவது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த காயத்ரி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |