இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டு இருங்களூர் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெமலியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரெமலியா அதே பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் டெக்னீசியனாக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதனை அடுத்து ரெமலியா மாலை நேரத்தில் குளியலறைக்குள் சென்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின் ரெமலியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ரெமலியா எந்த காரணத்திற்காக தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று தெரியவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.