சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் காவல்துறையினருக்கு அரங்கம் புதூர் சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் வசிக்கும் தமிழ் அரசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 220 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.