புதுக்கோட்டை மாவட்டத்தில் வேன் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை பகுதியில் தனியார் மதுபான ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள முல்லைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கர் பணி முடிந்ததும் ஊழியர்களை வேனில் ஏற்றிக் கொண்டு கோமாபுரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடு ரோட்டில் சரத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேனிற்கு வழிவிடாமல் சென்று கொண்டிருந்தார்.
இதனால் வேன் டிரைவர் மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சரத்குமார் வேன் டிரைவரிடம் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வேன் கண்ணாடியை உடைத்துள்ளார். இதுக்குறித்து காவல் நிலையத்தில் சங்கர், சரத்குமார் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.