Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி செய்யலாம்… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது உணவகத்தை திறந்து வியாபாரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கடைவீதியில் ஒருவர் உணவகத்தை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல் துறையினர் கடைக்கு சென்று அவரிடம் விசாரணை செய்தனர். இதனையடுத்து அவர் பெயர்  சேகர் என்பதும் இறைவன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் ஊரடங்கின் போது உணவகம் திறந்து விற்பனை செய்ததற்க்காக  சேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |