புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது தண்ணீர் பாட்டிலில் ஏரிசாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் எரிசாராயம் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது காத்தாயி அம்மன் கோவில் தெருவில் 2 லிட்டர் எரிசாராயத்தை தண்ணீர் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த அஜித் என்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.