கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள உலகநேரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வெங்கட்ராமன் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் மது போதையில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த வெங்கடேசன் கத்தியை காட்டி வெங்கட்ராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வெங்கட்ராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.