கல்லூரி மாணவியை கிண்டல் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சிறுவாச்சூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் இந்த மாணவி அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது தனசேகரன் என்ற வாலிபர் அவரை கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனசேகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.