Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்காக தான் கடத்தினோம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தொடர் விடுமுறை காரணமாக சட்டவிரோதமாக கடத்தி சென்ற 717 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் காவல்துறையினர் தாராபுரம் சாலை, செங்காளிபாளையம் போன்ற பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் பெட்டிகளில் 717 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் என மூன்று நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்டதால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்காக இந்த 717 மதுபாட்டில்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் திருப்பூர் சாலை பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார், பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் வேனுடன் சேர்த்து 717 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |