Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்டு வந்த வாலிபர்…. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

காரில் லிப்ட் கேட்டு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரி 10 கிலோ கஞ்சா இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் பயணம் செய்த அந்த நபர் செங்கல்பட்டில் வசித்து வரும் ஜெரின் என்பதும், அவர் ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டையில் இருந்து லிப்ட் கேட்டு அந்த காரில் பயணம் செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ஆரம்பாக்கம் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெரினை கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர்.

Categories

Tech |