வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூலூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யோகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். அதன்பிறகு கத்தியை காட்டி மிரட்டி அந்த மர்ம நபர் யோகேஷின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து காவல் நிலையத்தில் யோகேஷ் புகார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக உதய சதீஷ் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்த வெள்ளி செயினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.