சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பட்டி பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கார்த்திக் மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.