குப்பை லாரி மீது கற்களை வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள எம்.கே புரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாநகராட்சி குப்பை லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் முத்துப்பட்டி மெயின் ரோட்டில் குப்பை லாரியை ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாலிபர் கற்களை எடுத்து லாரி கண்ணாடி மீது வீசியுள்ளார்.
இதுகுறித்து சரவணன் சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கற்களை வீசி தாக்கிய நபர் முத்துப்பட்டியில் வசிக்கும் ஜெகதீஷ் குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் ஜெகதீஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.