Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் ஏமாற்று வேலை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார் கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அரவிந்திற்கு நீதிமன்றம் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை ஐகோர்ட் பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்துள்ளது. அதன் பின் தலைமறைவாக இருந்த அரவிந்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |