ஓடும் ரயிலில் பயணிகளின் நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா ரயில் நிலையத்தில்இருந்து சென்ற ரயிலில் பயணித்த பெண் ஒருவரிடம் இருந்து மர்மநபர் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகையும், மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகை மற்றும் செல்போனை பறித்த மர்ம நபர் தப்பித்துவிட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர்நடத்திய விசாரணையில்பெண்களிடம் நகைகள் மற்றும் செல்போனை திருடிய மர்ம நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவா என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சிவா பெண்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை பறித்து செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிவாவை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்து காவல்துறையினர் பயணிகளிடம் ஒப்படைத்துவிட்டனர்.