மாணவியை பாலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கான் அப்துல்லா பரிந்துரையின் படி தொழிலாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ரமணா சரஸ்வதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.