வாலிபர் மிரட்டியதால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான சரவணகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சரவணகுமார் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை யாரிடமும் சொல்ல கூடாது என சிறுமியை அவர் மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி பள்ளிக்கு சென்று கழிப்பறையில் வைத்து தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் அந்த சிறுமியிடம் விசாரித்த போது சரவணக்குமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியதை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வஅந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவண குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.