17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஆண்டனி என்ற வாலிபர் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லை என மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆண்டனி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்டனியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர்.