15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நல்லநாயகபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.