17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் யோகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெப்பந்தட்டை பகுதிக்கு சென்றுள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை யோகராஜ் கடத்தி சென்றுள்ளார்.
இதனை அறிந்த அந்த சிறுமியின் தந்தை அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் யோகராஜை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதோடு கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர்.