சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரமேஷ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.