17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கருப்பசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருப்பசாமி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமி தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் நடத்திய விசாரணையில் கருப்பசாமி 17 வயது சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.