மது பாட்டில்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.முக்குளம் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் 3 லட்சம் மதிப்பிலான 4,500 மதுபாட்டில்கள் திருடபட்டுள்ளது. இது குறித்து டாஸ்மார்க் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அய்யனார், விஜி, நாகராஜ் ஆகிய 3 பேர் மது பாட்டில்கள் திருடியது தெரிய வந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.