Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பட்டறையில் இருந்த வெங்காயம்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

சின்ன வெங்காயத்தை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் வயலில் பட்டறை அமைத்து சேமித்து வைப்பது வழக்கம். இதற்கான நல்ல விலை கிடைக்கும் போது விவசாயிகள் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்வர். இந்நிலையில் செட்டிகுளம் கிராமத்தில் வசிக்கும் சரவணன் என்பவர் சின்ன வெங்காயத்தை தனது தோட்டத்தில் இருக்கும் பட்டறையில் சேமித்து வைத்துள்ளார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற வாலிபர் 2 மூட்டைகளில் சின்ன வெங்காயத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஒதியம் கிராமத்தில் வசிக்கும் ராம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |