மினி லாரியில் மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்உள்ள திருப்பாலபந்தல் காவல் துறையினர்கள் எடையூர் கூட்டுரோடு அருகில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வெளிமாநில 442 மது பாட்டில்கள் அந்த மினி லாரியில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் மினி லாரியை ஓட்டி சென்ற அந்த நபரிடம் நடத்திய விசாரைணயில் அவர் எடையூர் கிராமத்தில் வசிக்கும் ராஜகுமாரன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் ஊரடங்கு நேரம் என்பதால் பெங்களூரில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்ததுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜகுமாரனை கைது செய்ததோடு, அவர் கடத்தி சென்ற 3 லட்ச மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.