சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள விளக்குத்தூண் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் சையத் இஸ்மாயில் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சட்ட விரோதமாக அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சையத் இஸ்மாயிலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.