காய்கறி திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாட்சியாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலின் அருகே தொழிலாளிகள் காய்கறி வியாபாரம் செய்வது வழக்கமாகும்.
அப்போது அந்த வழியாக வந்த ரிசர்வ் லைன் பகுதியில் வசிக்கும் நல்லசிவம் என்பவர் காய்கறியை திருட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் நல்லசிவத்தை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நல்லசிவத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.