17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கணவனை இழந்து தவிக்கும் பெண் ஒருவர் அரசு பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 12 – ஆம் வகுப்பு பயிலும் 17 – வயது மகள் இருக்கின்றார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய வாலிபர் ஒருவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு மாணவியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அந்த வாலிபர் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.