வாலிபரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்த குற்றத்திற்காக பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிந்த ராமச்சந்திரன் விடுமுறையில் ஊருக்கு வந்து மானாமதுரையில் இருக்கும் லாட்ஜில் தங்கி உள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரனின் அறை கதவை இரண்டு பேர் தட்டியுள்ளனர். இதனையடுத்து கதவை திறந்த ராமச்சந்திரனை பாலசுப்பிரமணியம் மற்றும் சுதா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளார்.
அதன் பிறகு அவரிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாய் பணம், பாஸ்போர்ட், செல்போன் போன்றவற்றை பறித்து விட்டு இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலசுப்பிரமணியன் மற்றும் சுதா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.