Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் இப்படி செய்யலாமா… கைதான சகோதரர்கள்… வாலிபர் அளித்த பரபரப்பு புகார்…!!

தோட்டத்தில் குப்பை போடுவதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை சகோதரர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வலசாகாரன்விளை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அஞ்சலகத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முன்னாள் இராணுவ  படை வீரரான தனபால் என்ற சகோதரர் இருக்கின்றார். இவருடைய வீட்டின் பக்கத்தில் சத்தமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை என்பவருடைய தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த தோட்டத்தில் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை தனபாலனும், பாஸ்கரும் போடுவதை பார்த்த சின்னத்துரை அவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, கோபமடைந்த சகோதரர்கள்  இணைந்து சின்ன துரையை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சின்னதுரை சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கர் மற்றும் தனபால் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |