Categories
உலக செய்திகள்

அழிந்து வரும் தேன் சிட்டுக்கள்… மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றி கண்ட பெண்..!!

மெக்ஸிகோவில் அழிந்து வரும் தேன்சிட்டுக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மனிதர்களாகிய நாம் கண்களை இமைப்பதை விடவும் இறக்கையை வேகமாக அடித்துக் கொள்ளும் பறவை தேன்சிட்டுக்கள். இந்த தேன் சிட்டுக்கள் தற்போது மெக்ஸிகோ நகரத்தில் அரிதினும் அரிதாகிப் போய்விட்டது. ஆம் இந்த பறவை அழியப்போகும் நிலையில் இருக்கின்றது. இதையடுத்து அந்தப் பறவைகளை மீட்டெடுப்பதற்கு, உயிரியலாளரான கிளவ்டியா என்ற பெண் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

Image result for The country is home to 58 different species but half of its 13 endemic species are now at risk of extinction as suitable habitats are shrinking because of human settlements and even climate change.

அதாவது மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் பங்குவகிக்கும் தேன்சிட்டுக்களை கவர்வதற்காகவே , கிளவ்டியா அதற்கு மிகவும் பிடித்த மலர் தோட்டங்களை  உருவாக்கினார். இதனால் தற்போது தேன்சிட்டுக்கள் வர ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்த அவர், எங்கேயாவது, எப்போதோவது  கண்ணில் தென்படும் தேன்சிட்டுக்கள் தற்போது பெருகி வருவதாக குறிப்பிட்டார்.

Image result for The country is home to 58 different species but half of its 13 endemic species are now at risk of extinction as suitable habitats are shrinking because of human settlements and even climate change.

மேலும் காடுகளை அழிப்பதாலேயே  இந்தவகைப் பறவைகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டதாகக் கூறும் அவர், 58 வெவ்வேறு உயிரின வகைகளில் 13 வகை தேன்சிட்டுக்கள் அழிந்து போய் விட்டதாகவும் தெரிவித்தார். ஏனெனில் மனித குடியேற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பொருத்தமான வாழ்விடங்கள் சுருங்கி வருவதன் காரணமாக இது போன்ற நிலை ஏற்படுகிறது.

Categories

Tech |