Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் மகளால் பிரச்சனை…. இளைஞர் அடித்து கொலை…. கேஸ்ல பெயர் சேர்க்காம இத செய்யாதீங்க….. உறவினர்கள் எதிர்ப்பு….!!

கரூர் அருகே பெண்ணிடம் பேசிய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை 3 பேர் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியை அடுத்த காலனி தெருவில் வசித்து வருபவர் வடிவேல். இவர் நேற்று முன்தினம் அப்பகுதி வழியாக மாலை நேரத்தில் நடந்து வந்த ஒரு பெண்ணிடம் பேசியுள்ளார். சிறிது நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட அதே நச்சலூர் பகுதியை சேர்ந்த இளைஞர்களான வேலு, சதீஷ், சங்கர் ஆகிய மூன்று பேரும் பெண்ணிற்கு ஆதரவாக பேசுவதாக கூறி வடிவேலை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அவரது தலையில் ஏற்பட்டு இரத்தம் வடியவே பயம் அடைந்த 3 பேரும் வடிவேலின் தாயை கூட்டிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடினர்.

செல்லும் வழியில் உமது மகன் இருசக்கர வாகனத்தில் இருந்து தான் கீழே விழுந்தான் என்று கூறினால்தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பார்கள் என்று வடிவேலின் தாயாரை குழப்பியுள்ளனர். அதன்படி, அவரும் மருத்துவமனையில் கூறியுள்ளார். இதையடுத்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொள்கையில், அதிகாரிகளிடமும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வடிவேல் உயிரிழக்க உடனடியாக காவல் நிலையம் சென்று நடந்த அனைத்தையும் கூறி 3 பேர் மீதும் வடிவேலின் தாயார் புகார் அளித்துள்ளார்.

இதில் வடிவேல் பேசிய பெண்ணின் தந்தை போலீஸ்காரர் என்பதால் வழக்கில் குற்றவாளிகளின் பெயர்கள் பதியப்படாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்ட பெண் உட்பட அனைவரின் பெயரையும் வழக்கில் இணைத்த பின்புதான் வடிவேலுவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையம் சென்று அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு பின் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |