Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”… படுத்துக்கொண்டே கோடீஸ்வரான இளைஞர்… எப்படி தெரியுமா…? சுவாரஸ்ய நிகழ்வு…!!!

இங்கிலாந்தில் ஒரு நபர் படுக்கையறையில் படுத்திருந்தவாறு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கிலாந்தில் வசிக்கும் ஜானி பவ்பார்ஹேட் என்ற நபர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தற்போது ஊரடங்கு சமயத்தில் காதலின் வீட்டில் மாட்டிக்கொண்டதால் சும்மா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு ஒரு அப்ளிகேஷனை டிசைன் செய்து அதற்குரிய கோடிங்கை எழுதியிருக்கிறார்.

அதற்கு அவர் ஹோபின் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த அப்ளிக்கேஷன் தொடர்பில் அவர் 2018-ஆம் வருடத்திலிருந்தே திட்டமிட்டிருக்கிறார். அதை செய்வதற்கு அவருக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில், காதலியின் வீட்டில் இருப்பதால் அந்த அப்ளிகேஷனை டிசைன் செய்திருக்கிறார்.

அப்போது வெற்றிகரமாக முடிந்த, அந்த அப்ளிகேஷன் வெளியானவுடன் அதிக வரவேற்பு பெற்று 50 லட்சம் மக்கள் உபயோகிக்க தொடங்கிவிட்டார்கள். தற்போது இதன் மதிப்பு, 4 டிரில்லியனை கடந்து, அவர் அந்நாட்டின் 113 வது பணக்காரராக உயர்ந்து விட்டார்.

Categories

Tech |