குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜா தினமும் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட போது ராஜா தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனை அடுத்து கோபத்தில் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார் .
இதனை அடுத்து ராஜா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ராஜா தனது அக்கா வீட்டின் அக்கம்பக்கத்தினரிடமும் தகராறு செய்ததால் ராஜாவை அவரது அக்கா கண்டித்துள்ளார். இதனை அடுத்து தனது மனைவி கோபத்தில் அம்மா வீட்டிற்கு சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த ராஜா திடிரென தனது அக்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.