Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

தன்னுடைய கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்ததால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பகுதியில் குலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் சுரேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் அப்பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை அங்கே வசிக்கும் சிலர் பார்த்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |