மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உலகங்காத்தான் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வெங்கடேஷிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து மனைவி தன்னை விட்டு பிரிந்ததை நினைத்து சோகத்தில் இருந்த அவர் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.