Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதுல ஏறாமல் இருந்திருக்கலாம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின் மாற்றியின் மீது ஏறிய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோட்டத்திற்கு பக்கத்தில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நவநீத கிருஷ்ணன் அதனை சரி செய்வதற்காக மின் மாற்றியின் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நவநீதகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது.

இதனால் தூக்கி வீசப்பட்ட நவநீத கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |